தமிழ்
மொழியால்
இயல், இசை, நாடகத்தால்
மரபு, நாட்டுப்புறக் கலையால்
ஆனந்தத்தைக் கொடுத்து
மகிழ்வித்த
ஆனந்த கண்ணா
எங்களை அழவும்
அலறவும் வைத்து
ஆறுதல் கூற முடியாத
அளவுக்கு
இவ்வளவு சீக்கிரம்
ஆண்டவனின்
அழைப்பை ஏற்று
போய்விட்டாயே!
நெஞ்சம் கனக்கிறது
இனி என்று பார்போம்
உன்னை
கேட்போம் உன்குரலை.
தமிழாசிரியை
ஹபிபா ஹமீட்