கண்ணா..
காணும் போதெல்லாம் உரக்க மகிழ்ச்சியான குரலில் அழைத்து தெம்பை கொடுப்பாய்.
2001ம் ஆண்டில் மெல்பெர்னில் செல்வாவின் இயக்கத்தில் உன்னுடன் நடித்த குறுகிய வட்டம் நாடகத்தின் போது எங்களை நீ பத்திரமாக கவனித்துக் கொண்டது அக்கறையாக இருந்தது எத்தனை ஆண்டுகளானலும் மறக்க முடியாதது.
எப்படி கண்ணா உன்னால் மட்டுமே காண்பவர்களை அன்பால் கட்டுப்படுத்தும் மொழி தெரிந்தது... உன்னைப் போல் ஒருவன் இனி பிறப்பது அரிது..
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மனதார எனது பேஷன் பிஸினஸ் ஆரம்பித்த நேரத்தில் சென்னையில் சினேகா அக்காவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாய். மற்றவர்களும் வாழ்க்கையில் வளர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவன் நீ கண்ணா.
இருந்தும் இறந்த பலர் முன்னில் பிரிந்தும் எங்கள் மனதில் நிறைந்த உன்னைப் போன்ற கலைஞனுக்கும் அன்பான அப்பழுக்கற்ற நண்பனுக்கும் இறப்பில்லை கண்ணா.
விரைவில் சந்திப்போம் கண்ணா ..🙏