top of page

Celebrating Anandha Kannan

Public·458 Celebrators

தோழர்.ஆனந்தக் கண்ணன் அவர்களுக்கு எங்கள்

முரசு கலைக்குழுவின்

சலங்கை ஒலி நினைவேந்தல்...








வணக்கம்... ஒரு மாபெரும் கலைஞனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறோம்...


தோழர்.ஆனந்தக் கண்ணன்...


சிங்கப்பூர் பள்ளி கல்லூரி மாணவர்கள் தமிழ் மரபுக் கலைஞர்களை அறியும் விதமாக நமது தமிழ் மண்ணின் கலைகள் ஒவ்வொன்றிற்கும் நாம் ஒவ்வொரு பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் என்று என்னிடமும் முனைவர் அருள்செல்வி மற்றும் பல்வேறு கலை ஆளுமைகளோடு விவாதித்து வந்தவர்...

உயிர், உடல், மனம், சிந்தனை, குரல், கற்பனை, படைப்பாற்றல் என எல்லாவற்றையும் கலைக்குத் தந்தே வாழ்ந்து கொண்டிருந்தவர்...


திரை, தரை, அரங்கம் என எங்கும் நிரம்பி கலைக் காற்றாய் மனித மனங்களில் சுவாசமாய் நிறைந்தவர்...


2017 மார்ச் மாதம் திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் aKt ஒருங்கிணைப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் தற்காப்புக் கலையின் அசைவுகளை அடவுகளாகக் கொண்ட குமரி மாவட்டத்தின் களியல் கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முரசு கலைக் குழுவை அழைத்து பயிற்சி அளிக்கச் செய்தார்...


நானும் முனைவர் அருள்செல்வி அவர்களும் அப்போது தான் ஆனந்தக் கண்ணன் அவர்களை நேரடியாக சசந்திக்கிறோம்...


தொடர்ந்து ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் மண்ணின் பாடல்கள் மற்றும் விளையாட்டுகள் மூலமாக தமிழ் எழுத்துக்களை கற்பித்தல் பயிற்சிகள், குழந்தைகளுக்கு கதை சொல்லுதல்...


பாடல்கள் மூலமாக எண்கள், வண்ணங்கள், பூக்கள், பறவைகள்... போன்றவைகளை மனதில் பதிய வைக்கும் பயிற்சிகள் என விரிந்தது...


தோழர் ராணி கன்னாவும் ஆனந்தக் கண்ணனும் கலை வழி கல்வி, கலை வழி மாணவர்களின் ஆளுமை, உடல் மன உறுதி, படைப்பாற்றல் வளர்த்தல் என பெருங் கனவுகளோடு நிறைய பகிர்ந்து கொண்ட அனுபவம் இன்னும் நெஞ்சில் ஈரம் காயாமல் கிடக்கிறது...


பேரிழப்புகள் பெரும் வெற்றிடங்களை உருவாக்கித் தொலைக்கிறது...


தீரா பறை அதிர்வுகளுடன்... க.ஆனந்த் முனைவர் ஞா.அருள்செல்வி முரசு கலைக்குழு.


(புகைப்படங்கள்... திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், கலைப் பயிற்சிகள். குழந்தைகள் விளையாட்டு, குழந்தைகள் விளையாட்டு பாடல்கள், கதை சொல்லுதல், குமரி மாவட்ட களியல் ஆட்டக் கலைப் பயிற்சிகள்.)

Vivek Chendhurpandi
Akt Krishnna Kumarri Akt Krishnna Kumarri

About

Celebrating Anandha Kannan. A cheerful man full of energy, i...

Celebrators

bottom of page