2005ஆம் ஆண்டாக இருக்கலாம்.
கஜினி படத்திரையீடு ஈஷூனில். இரவுக்காட்சிக்கான எங்களது காத்திருப்பில், அருகிலிருந்தக் கடைத்தொகுதில் ஆனந்தக் கண்ணனைக் கண்டேன். 'எங்கே இப்படி' என்றேன். "கஜினி படம் பார்க்கக் குடும்பத்தோடு வந்தோம். படம் ஏற்கனவே பார்த்து விட்டேன். இரண்டாம் பாதியில் வருகிற வன்முறையில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் வெளியில் வந்து விட்டேன்" என்று ஒரு பதில். ஆனந்தக் கண்ணனின் இந்த மென்மை அப்போது என் மீது போர்த்திக் கொண்டது. அடுத்தவரைத் தொற்றிக் கொள்கிற அந்தப் புன்னகையில், அவர் எப்போதுமே எனக்குப் 'பேரானந்தக் கண்ணனாகவே' இருப்பார், நினைவிலும், எந்த நிலையிலும்.
-அமீருத்தீன்