எவ்வளோ புகழ்பெற்ற கலைஞனாக நீர் இருந்திருந்தாலும்,
நான் உம்மிடம் கண்டதோ சற்றும் தலைக்கணம் இல்லாத, பண்பு, பணிவு, பாசம், மரியாதை, அன்பு, அடக்கம், கனிவு, தமிழ் பற்று இன்னும் பல சொல்லில் அடங்கா குணங்கள் மட்டுமே இந்த நொடியிலும் என் கண் முன் நிழலாடுகின்றது ! உம்முடைய மிக இனிமையான கனிவான குரல் என் காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கின்றது !
இப்படிபட்ட ஒரு ஆத்மாவை என்னை சந்திக்க வைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி !!!
நீர் என்றுமே எங்களின் ஆனந்த கண்ணன் !