சிங்கப்பூர் தமிழ் பணி பயணத்தில் நான் வியந்த ஒரு இளைஞன்,கலைஞன்,கவிஞன்,இயக்குனர், மேடை தொலைக்காட்சி தொகுப்பாளர் இன்னும்
சொல்ல போனால் இவர் ஒரு சகலகலா வல்லவன் என்றால் அது மிகையாகாது.
மிகவும் பணிவுடனும் இனிமயுடனும் பேசும் ஆற்றல் பெற்றவர். இளம் வயதிலே தமிழுக்கும் தமிழ் கலை உலகிற்கும் அயராது உழைத்த வர்.இவரின் தந்தை கெப்டன்.கோவிந்தராஜூ அவர்களின் தமிழ் பணி தமிழ் சமுதாயத்திற்கு ஒரு எடுத்து காட்டு என்பது இங்கு குறிப்பிட தக்கது. சிங்கப்பூர் பெக் கியோ தமிழ் கலாச்சார குழுமம் அனந்தகண்ணனின் முதல் படிவம் . இவர் தமிழுக்கு தொண்டாற்றிய உண்மையான தமிழன் என்றால் அதுவும் மிகையாகாது. அனந்தகண்ணனை இறுதியாக 2018ல் சென்னையில் சிங்கப்பூர் தேசிய தின விழா நிகழ்ச்சியில் சந்தித்த போது எனது தன்முனைப்பு வகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழைகிறேன் என்றார். மீண்டும் வருவேன் என்று சொல்லிவிட்டு இன்று சிவபதம் அடைந்து விட்டார்ர.அவரின் பிரிவு அவரது குடும்பத்திற்கும் தமிழ் கலை உலகிற்கும் ஒரு பேர் இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியும் சமாதானும் அடையட்டும். அவரது துணைவியாருக்கும் குழந்தைகளுக்கும் இந்த துயரத்திலிருந்து மீண்டு வர இறைவன் அவர்களுக்கு மன வலிமையை அளிக்குமாறு வேண்டுகிறேன்.ஓம் சாந்தி.